பிக்பாஸ் அடுத்த சீசனில் கமல்ஹாசன் இல்லையா? அவரே வெளியிட்ட அறிவிப்பு..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் இதுவரை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் எட்டாவது சீசனில் தான் இல்லை என்று கமலஹாசன் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே நான் ஒப்புக்கொண்ட சினிமா பணிகள் காரணமாக பிக் பாஸ் அடுத்த சீசனை தொகுத்து வழங்க முடியவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அடுத்த சீசனில் இருந்து நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன்.
எதிர்வரும் பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பு மழை பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் இது நாள் வரை பங்கேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
என்னுடைய கற்றலையும் நான் உங்களுக்கு தெரிவித்தேன், உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன், எனக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பளித்த விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் குழுவினர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிக்பாஸ் சீசன் 8 சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
Edited by Siva