வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (08:52 IST)

கமலுக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போகும் பிரபலம் இவரா?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஒரு சீசனில் இடையில் அவர் வெளியேறிய நிலையில் சிம்பு தொகுத்து வழங்கினார். இந்நிலையில் எட்டாவது சீசனில் இருந்து கமல்ஹாசன் தன்னுடைய சினிமா பணிகள் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக ரசிகர்களுக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் நன்றி தெரிவித்து கமல்ஹாசன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் நீண்ட சுற்றுலா ஒன்றை அமெரிக்காவில் மேற்கொள்ளவுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியிடம் அது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.