1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஜூலை 2020 (12:00 IST)

டாக்டர்கள் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது, அமிதாப் மீண்டு வருவார்: கமல்ஹாசன்

டாக்டர்கள் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை  சிகிச்சை பெற்று வருகின்றனர். அமிதாப், அபிஷேக் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருந்தாலும் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களுடைய மகள் ஆராதனா ஆகிய மூவருக்கும் கொரோனா இல்லை 
 
இந்த நிலையில் அமிதாப், அபிஷேக் ஆகிய இருவரும் விரைவில் குணமாக வேண்டும் என்று தனுஷ், மாதவன், அக்சய்குமார், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல் ரஜினிகாந்த் இன்று காலை அமிதாப், அபிஷேக் ஆகிய இருவரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து கேட்டறிந்து விரைவில் இருவரும் குணமாக வாழ்த்து தெரிவித்தார்.
 
இந்த நிலையில் ரஜினியை அடுத்து கமல்ஹாசனும் தனது டுவிட்டரில் அமிதாப், அபிஷேக் ஆகிய இருவரும் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவிப்பதாகவும், இந்திய டாக்டர்கள் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதால் விரைவில் அவர்கள் குணமாகிவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமிதாப் அவர்கள் விரைவில் குணமாகி பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று அவர் தனது டுவிட்டில் பதிவு செய்துள்ளார்.