அமிதாப்பை அடுத்து அபிஷேக்பச்சனுக்கும் பாசிட்டிவ்: பாலிவுட்டில் பரபரப்பு

அமிதாப்பை அடுத்து அபிஷேக்பச்சனுக்கும் பாசிட்டிவ்
Last Modified ஞாயிறு, 12 ஜூலை 2020 (07:01 IST)
அமிதாப்பை அடுத்து அபிஷேக்பச்சனுக்கும் பாசிட்டிவ்
இந்தியாவின் முன்னணி சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகிய அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த தகவலை அபிஷேக் பச்சன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
தனக்கும் தனது தந்தைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இருவருக்குமே மிகக் குறைந்த அளவில்தான் அறிகுறிகள் இருப்பதாகவும் எனவே இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தப்படுத்த்ஹி கொள்ளுமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார். மேலும் தனது குடும்பம் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அதன் முடிவுகள் வரும் என்றும் அவர் தெரிவித்தார்


இதில் மேலும் படிக்கவும் :