திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 11 ஜூலை 2020 (23:34 IST)

பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவிவரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிகப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று மஹாராஷ்டிராவில் சுமார் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கதில் தனக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாகவும், தனது குடும்பத்தினரான மகன் அபிஷேக் பச்சன், மனைவி ஜெயா பச்சன்,  மருமகள் ஐஸ்வர்யா ராய், குழந்தைகளுக்கு மருத்துவமனை பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால் அவரது ரசிகர்கள் அவர் விரையில் குணம் பெற வேண்டுமென பிரார்த்தித்து வருகின்றனர்.