ஐஸ்வர்யாராய், ஜெயாபச்சன், ஆராதனா ஆகியோர்களுக்கு கொரோனாவா? பரிசோதனை முடிவுகள்

ஐஸ்வர்யாராய், ஜெயாபச்சன், ஆராதனா ஆகியோர்களுக்கு கொரோனாவா?
Last Modified ஞாயிறு, 12 ஜூலை 2020 (07:09 IST)
ஐஸ்வர்யாராய், ஜெயாபச்சன், ஆராதனா ஆகியோர்களுக்கு கொரோனாவா?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாக நேற்று இரவு தகவல்கள் வெளிவந்தன. இதனை அவர் தனது டுவிட்டரில் உறுதி செய்திருந்தார்
மேலும் அமிதாப்பை அடுத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன் அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் மனைவி ஐஸ்வர்யா ராய், மற்றும் அமிதாப் பேத்தி ஆராதனா ஆகியோர்களின் பாசிட்டிவ் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராதனா ஆகிய மூவருக்குமே நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால் அமிதாப் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்

தற்போது அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இருவருக்கும் மிகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


இதில் மேலும் படிக்கவும் :