புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (10:44 IST)

பட்ஷிராஜனாக கமல் – 2.0 வெளிவராத ரகசியம்

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.0 படம் உலகெங்கும் ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.

2.0 படத்தில் ரஜினியின் சிட்டிக் கதாபாத்திரத்திற்குப் பிறகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது அக்‌ஷய்குமார் ஏற்று நடித்த பட்ஷிராஜன் கதாபாத்திரம் தான். பறவைகள் ஆய்வாளரான சலீம் அலியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் கமல்ஹாசன்தானாம்.

ஷங்கரும் எழுத்தாளர் ஜெயமோகனும் 2.0 கதையை எழுத ஆரம்பித்த போதே அந்த கதாபாத்திரத்திறகுக் கமலை மனதில் வைத்தே எழுதியுள்ளனர். கதையைக் கமலிடம் சொன்ன போது அவரும் மகிழ்ச்சியாகக் கேட்டு நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் சம்பள விஷயம் மற்றும் கால்ஷீட் பிரச்ச்னைகளால் 2.0 படத்தில் கமல் நடிக்க முடியாமல் போய்விட்டதாக தகவலகள் வெளியாகி உள்ளன.

இதைப் படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் ஜெயமோகனும் ஆமோதித்துள்ளார்.இதுகுறித்து தனது வலைதளத்தில் எழுதியுள்ள அவர் பட்சிராஜனின் நடை உடை பாவனைகள் மற்றும் வசனங்கள கமலை மனதில் வைத்தே எழுதப்பட்டது என தெரிவித்துள்ளார்.