1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (08:39 IST)

2.0 ஒரு மொக்கப்படம்: பிரபலத்தின் கருத்தால் கடும் சர்ச்சை

2.0 ஒரு சலிப்பான படம் என பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறியிருப்பது ரஜினி ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
ரஜினி நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம்  வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பலர் ஆதரவான கருத்துக்களை கூறினாலும் சிலர் படம் படு சுமார் தான் என கூறி வருகின்றனர். படத்தில் கதைக்களம் இன்னும் ஸ்ட்ராங்காக இருந்திருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்து.


























இந்நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, 2.0 ஒரு மொக்க படம், சோர்வான படம், படத்தில் சுவாரசியம் என்பது துளிக்கூட இல்லை என கூறியிருக்கிறார்.  ஷங்கர் படத்துல அம்பது ரூபாய் லஞ்சம் வாங்கும் ட்ராஃபிக் போலீஸை ஷங்கரின் ஹீரோ சுட்டுப் பொசுக்குவான். ஆனால் 5000 கோடி ஊழல் பண்ணினவன் பற்றிப் பேச்சே இருக்காது.

தாலிபான்களிடம் இருக்கும் அடிப்படை நேர்மை கூட ஷங்கரிடம் இருக்காது. உதாரணம், செல்ஃபோன் டவர்களால் பறவையினங்கள் அழிந்து மனித குலத்த்துக்குக் கேடு என்று சொல்லும் 2.0 வை 600 கோடி ரூபாயில் எடுத்த லைகா நிறுவனமே செல்போன் விற்பனை செய்யும் நிறுவனம்தான். ஷங்கர் கொடுத்திருக்கும் மொக்கை படங்களில் இதுவும் ஒன்று என காட்டமாக கூறியிருக்கிறார்.  அவரின் 2.0 வின் கருத்து பற்றின பேஸ்புக் பதிவு உங்களின் பார்வைக்காக...