ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (10:36 IST)

கஜா பாதிப்புக்கு மனம் வருந்திய அமீர்கான் - நன்றி தெரிவித்த கமல்!

டெல்டா விவசாயிகளை புரட்டி எடுத்த கஜா புயல் பாதிப்புகளை பற்றி அறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் ஆன பங்களிப்பை செய்வோம் என்றும் இந்தி நடிகர் அமீர்கான் ட்வீட் செய்துள்ளார். 
பிரபல இந்தி நடிகர் அமீர் கான், கஜா புயல் பாதிப்புகள் குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், “தமிழ்நாட்டில் கஜா புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவ நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். நம்மால் முடிந்த ஏதாவது நம் வழியில் பங்காற்ற முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார்.
 
அமீர்கானின் இந்த கருத்துக்கு நடிகரும் மக்கள் நீதி  மய்யம் தலைவருமான கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். 
 
கமல் தனது பதிவில், "மிக்க நன்றி அமீர் ஜி. உங்களை போன்றவர்களால் தான் இந்தியா ஒரே நாடு என்ற எண்ணம் வருகிறது" என தெரிவித்துள்ளார். 
 
குறிப்பாக இந்த நேரத்தில் நாடு முழுக்க அனைவரும் 2.0 படத்தை பற்றி பேசும் போது அமீர் கான் கஜா பற்றி பதிவிட்டதற்கு ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.