வெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளில் ஐஸ்வர்யாவை கமல் கலாய்த்ததால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை கூறி கொண்டிருந்தபோதும் ஐஸ்வர்யாவும் தனக்கு கை, கால், முகம் எல்லா இடத்திலும் அடிபட்டது என்று கூறினார். ஆனால் ஒரு இடத்திலும் அவருக்கு அடிபட்ட அறிகுறியே தெரியாததால் எல்லா அடியும் வெளியே தெரியாத உள் அடி போல, என்று கமல் கூறி கலாய்த்தார்
அதேபோல் இந்த சீசனில் உள்ளவர்கள் வெளியே சந்தித்து கொள்ள வேண்டாம் என்று தான் நினைப்பதாக கூறினார். குறிப்பாக வெளியே வா பாத்துக்கலாம் என்று கூறிய ஐஸ்வர்யாவையும் யாஷிகாவை அவர் குத்திக்காட்டியபோது இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.
அதேபோல் ஒரு போட்டியின் யுக்தி தேவைதான். ஆனால் ஒருவர் அடிபட்டு கொண்டிருந்த நிலையில் யுக்தியை பயன்படுத்துவது சரியல்ல என்றும் ஐஸ்வர்யாவுக்கு நேரடியாக புத்திமதி கூறினார். ஆனால் இந்த புத்திமதியெலாம் ஐஸ்வர்யாவின் தலையில் ஏற வாய்ப்பில்லை. நாளைக்கே அவர் மீண்டும் தனது ஒரிஜினல் முகத்தை காண்பிக்க தவறமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது