திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (16:25 IST)

ஐஸ்வர்யாவால் ஜனனிக்கு காயம்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி 95 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
மாவு பெட்டியில் மாவினை குறைக்கும் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. யாருடைய மாவு பெட்டியில் அதிக மாவு இருக்கிறதோ அவர்கள் வெற்றியாளர்களாக  அறிவிக்கப்படுவார்கள். இந்த டாஸ்க்கில் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, பாலாஜி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக இன்று காட்டப்பட்டுள்ள புதிய ப்ரோமோவில், காலில் அடிப்பட்ட நிலையில் ஜனனி இருக்கிறார். அவருக்கு ஐஸ்வர்யாவை தவிர மற்றவர்கள் ஓடிவந்து முதல் உதவி அளிக்கிறார்கள். அப்போது பாலாஜி, ஐஸ்வர்யாவை பார்த்து, நீ விளையாட தெரிந்தால் விளையாடு, இல்லாட்டி விளையாடாதே  என்கிறார். அதற்கு ஐஸ்வர்யா நான் விளையாட மாட்டேன் என்கிறார். அதற்கு பாலாஜி விளையாடாட்டி போ என்று கத்துகிறார். அதற்கு ஐஸ்வர்யா நீங்க போகச்சொல்றீங்க என்று கூச்சலிடுகிறார். அதற்கு விஜயலட்சுமி காத்தாதே என்று சொல்கிறார். கடைசியில் ஜனனியை எல்லோரும் கைத்தாங்கலாக  அழைத்துச்செல்கிறார்கள்.