ஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்?
பிக்பாஸ் போடும் மாஸ்டர் பிளானை பார்த்தால் அனேகமாக இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யாவாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஐஸ்வர்யாவுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு இருந்தாலும் ஐஸ்வர்யாவுக்கு எதிரான வாக்குகள் மூன்றாக உடையும். இதைத்தான் பிக்பாஸ் விரும்பினார்.
ஐஸ்வர்யாவுக்கு குறைவான ரசிகர்கள் இருந்தாலும் அந்த ரசிகர்களின் பத்து ஓட்டுக்கள் முழுசாக விழும். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு எதிரான வாக்குகள் ஜனனி, ரித்விகா மற்றும் விஜயலட்சுமி ஆகிய மூவருக்கும் பிரிந்து போகும். எனவே இந்த கணக்கின்படி ஐஸ்வர்யாவை வெற்றி பெற செய்துவிடலாம் என்பதே பிக்பாஸ் பிளானாக இருக்கலாம்.
ஆனால் மக்கள் அதிகம் வெறுக்கும் ஒரு நபர் டைட்டில் வின்னர் என்றால் முழுப்பழியும் கமல் மீதுதான் விழும். இப்படி ஒரு மோசடிக்கு கமல்ஹாசன் உடந்தை இல்லை என்றாலும் அவருக்கு தெரியாமல் இந்த மோசடி நடக்க வாய்ப்பு இல்லை என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
பிக்பாஸ் 2 சீசனை அவர் தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டதே இதன் மூலம் மறைமுகமாக தனது கட்சிக்கு பிரச்சாரம் செய்யலாம் என்பதுதான். ஆனால் தற்போது இருக்கும் ஒருசில ஓட்டுக்களுக்கும் ஆப்பு ரெடியாகிவிட்டது. ஐஸ்வர்யா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டால் கமல்ஹாசனின் இமேஜ் பெருமளவு டேமேஜ் ஆகும் என்பதே இப்போதைய நிலையாக உள்ளது. இதில் இருந்து கமல் எப்படி மீண்டு வருவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?