வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (11:11 IST)

விக்ரம் படத்தில் கண்பார்வை இல்லாதவராக நடிக்கிறாரா கமல்?

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் அவர் கண்பார்வை இல்லாதவராக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குனர் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கமலின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் படத்தில் கமல் கண்பார்வை குறைபாடு உடையவராக நடிப்பதாக சொல்லப்படுகிறது.