புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (20:38 IST)

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா? லேட்டஸ்ட் தகவல்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும் அதே நேரத்தில் முதல்கட்ட படப்பிடிப்பிலேயே திட்டமிட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவானதால் இந்த படத்தினை தொடர லைகா நிறுவனம் விரும்பவில்லை என்றும் தகவல் வந்தது
 
இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்த ரூ.2.5 கோடி பட்ஜெட் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ரூ.6 கோடி செலவு செய்தும் முதல்கட்ட படப்பிடிப்பின் பாதிகூட முடியாததால் லைகா நிறுவனம் அதிருப்தி தெரிவித்தது
 
மேலும் இந்த படத்தின் செட்டுக்காக தினமும் ரூ.70 ஆயிரம் தயாரிப்பு நிறுவனம் வாடகை கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் திட்டமிட்டபடி படப்பிடிப்புக்கு வராமல் பாராளுமன்ற தேர்தல் குறித்த அரசியல் பணிகளில் மூழ்கியுள்ளார். 
 
எனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் 'இந்தியன் 2' படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி கமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனின் 'மருதநாயகன்', 'சபாஷ் நாயுடு' ஆகிய திரைப்படங்கள் பாதியில் நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.