புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 மார்ச் 2019 (22:28 IST)

டைட்டிலை மாற்றி 37 ஆயிரம் தியேட்டரில் மீண்டும் ரிலீஸ் ஆகும் ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் வெளியான '2.0' திரைப்படம் ரூ600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் சீன டப்பிங் பணிகள் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் இந்த படம் தற்போது சீன மொழியில் ரிலீசாக தயாராகிவிட்டது. இதனையடுத்து சீன ஊடகங்களில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளடு.
 
சீனாவில் இந்த படம் 'பாலிவுட் ரோபோட் 2.0' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதனை சீன மொழியில் வெளியான ஃபர்ஸ்ட்லுக் உறுதி செய்துள்ளது. மேலும் சீனாவில் 37 ஆயிரம் 3D திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சீனாவின் வசூலையும் சேர்த்தால் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.