வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (16:55 IST)

சிம்பு பட ''ஆடியோ விழா''வில் கலந்துகொள்ளும் கமல்ஹாசன்!

vendhu thanitathu kadu
நடிகர் சிம்பு நடித்து வெளியாக தயாராக உள்ள “வெந்து தணிந்தது காடு” படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் அமையும் மூன்றாவது படம் இது.

 
இந்த படத்தின் மறக்குமா நெஞ்சம் உள்ளிட்ட 2 பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த கட்டமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

செப்டம்பர் 2ம் தேதி வேல்ஸ் யுனிவர்சிட்டியில் நடைபெற உள்ள இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக ரூ.3 கோடி செலவில் 6000 இருக்கைகளுடன் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த  நிலையில், செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள  ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு  நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார் அப்பட்த்தீன் தயாரிப்பாளர் ஐசரி கணேசன்.

இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கமல் தயாரிப்பில் சிம்பு விரைவில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.