வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (13:47 IST)

கமல்ஹாசனுடன் இணையும் சிவகார்த்திகேயன்! – மேடையிலேயே அறிவித்த சி.கா!

SK21
ரெட் ஜெயண்ட் மூவிஸின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தொடங்கிய படத்தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட 15ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த மற்றும் விநியோகித்த படங்களின் வெற்றிக்காக கௌரவிக்கப்பட்டனர். சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் வெற்றி பெற்றதற்காக சிவகார்த்திகேயனுக்கு விழா மேடையில் கமல்ஹாசன் கையால் பரிசளிக்கப்பட்டது.

அப்போது பேசிய சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டெர்நேஷனல் தயாரிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான இவர் இதற்கு முன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான “ரங்கூன்” படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.