1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 24 ஜூன் 2021 (06:09 IST)

கேன்சரால் போராடும் தீவிர ரசிகன் - வீடியோ காலில் சர்ப்ரைஸ் கொடுத்த உலக நாயகன்!

உலக நாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். நவரச நடிப்பு திறமையை கொண்டிருக்கும் கமலஹாசனுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது சொல்லவரும் விஷயம் என்னவெனில், கனடாவில் மூளை புற்றுநோய்(Stage 3)ல் போராடும் தனது தீவிர ரசிகரான சாகேத் என்பவருடன் கமல்ஹாசன் Zoom Call மூலம் உரையாடினார். 
 
10 நிமிடங்களுக்கும் மேலாக நீண்ட இந்த உரையாடலில் அவருடனும் அவர் குடும்பத்துடனும் பேசிய கமல்ஹாசன் அவர் விரைவில் குணமடைய நம்பிக்கை வார்த்தைகளை அளித்தார். ரசிகனை பார்த்தவுடனே கண்கலங்கி உருக்கமாக பேசிய கமலின் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.