1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (18:41 IST)

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் கமல்ஹாசன்

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்  மோகன்லால். இவர்  நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

'மலைக்கோட்டை வாலிபன்' என்று பெயரிடப்பட்ட இந்த டைட்டிலை மோகன் லால் சமீபத்தில், தன்  சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு  பிஎஸ். ரஃபீகியூ எழுத்தாளராகவும்,பிரசாந்த் பிள்ளை இசையமைப்பாளராகவும்,  மது நீலகண்டன்  நடன இயக்குனராகவும், காந்தாரா பட புகழ் விக்ரம் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தை லியோ ஜோஸ் பள்ளிச்சரி இப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான உன்னைப் போல் படத்தில் கமல்ஹாசன் – மோகன்லால் இருவரும் இணைந்து நடித்தனர்.

அதன் பின் மீண்டும் இணைந்து இந்த மான்ஸ்டர் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதற்காக கமலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நிச்சயம் இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited By Sinoj