திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 டிசம்பர் 2022 (22:21 IST)

நாளைய நம் வளமையை நோக்கி வழிநடத்தும் பயணம்- கமல்ஹாசன்

kamalhasan
’’நம் பாரதத்தின் கடந்தகால நேர்மையை நாளைய நம் வளமையை நோக்கி வழிநடத்தும் பயணம் இது என்றே நான் உணர்கிறேன்’’என்று ம. நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி  தன் கட்சியை மக்களிடம்  கொண்டு செல்ல வேண்டி, இந்தியா முழுவதும் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை நடத்தி வருகிறார்.

இந்த யாத்திரை இன்று நடந்த நிலையில், யாத்திரையில் நடிகரும் ம. நீ, மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தான் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தியுடன் இணைந்துள்ளார்.

தலை நகர் டெல்லியில், காங்கிரஸ் சார்பில் ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

அதில், காங்கிரஸ் தலைவர்கள், ராகுல் காந்தி எம்பி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் பேசினர்.

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:  ராகுல் தலைமையில் தொடங்கியுள்ள  இந்திய ஒற்றுமை என்பது ஒரு தொடக்கம் தான்! அரசியலமைப்புச் சட்டத்திற்கு நெருக்கெடி வரும்போது, எந்தக் கட்சியாக இருப்பினும் நான் போராட்டத்தில்  இறங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதால அவர் டிவிட்டர் பக்கத்தில், ‘’மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்’’ எனவும், ‘’நம் பாரதத்தின் கடந்த கால நேர்மையை நாளைய நம் வளமையை நோக்கி வழிநடத்தும் பயணம் இது என்றே நான் உணர்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.