மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளார். அதையடுத்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து விலகிவிட்டனர். இந்த சம்பவங்களுக்கு பின்னர் கமல் கட்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
புதிய நியமனங்கள்:
1. திரு. பழ. கருப்பையா – அரசியல் ஆலோசகர்
2. திரு. பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
3. திரு. ஏ.ஜி. மெளரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
4. திரு. தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
5. திரு. செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
6. திரு. சிவ. இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
7. திரு. சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்
8. திருமதி ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்
9. திரு. ஜி. நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்