ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 மே 2021 (08:51 IST)

வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பாரதிராஜா!

இயக்குனர் பாரதிராஜா தனது வீட்டிலேயே கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நேற்று மட்டும் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் அரசு சுகாதார ஊழியர்கள் வீடு வீடாகவும் சென்று வயது முதிர்ந்தவர்களுக்கு ஊசி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்கு சென்று ஓய்வு எடுத்து வந்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு தேனி நகராட்சி மருத்துவமனை செவிலியர் வீட்டுக்கே சென்று கோவிஷீல்டு ஊசியை முதல் டோஸ் செலுத்தியுள்ளார். இது சம்மந்தமாக பாரதிராஜா சமூகவலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.