1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2019 (10:22 IST)

ரஜினி கொடுத்த வீடு குறித்து யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்: கலைஞானம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கலைஞானம் அவர்களுக்கு ரூ.60 லடசம் பெருமான வீடு ஒன்றை வாங்கி கொடுத்தார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் நடந்த விழாவில் கலைஞானம் வாடகை வீட்டில் வசிப்பதாக வெளியான செய்தியை அடுத்தே ரஜினிகாந்த், அவருக்கு வீடு வாங்கி கொடுத்தார்.
 
ஆனால் ரஜினி கொடுத்த இந்த வீடு குறித்து சமூக வலைத்தள பயனாளிகள் சிலர் வதந்தி ஒன்றை கிளப்பியுள்ளனர். அதன்படி இந்த ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், கலைஞானம் தனது வாழ்நாள் முழுவதும் அந்த வீட்டை அனுபவித்து கொள்ள மட்டுமே உரிமை உண்டு என்றும், அவரத் காலத்திற்குப் பின் அந்த வீடு லதா ரஜினிக்கு சென்றுவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
ஆனால் இதனை கலைஞானம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ரஜினிகாந்த் அவர்கள் தனது குடும்பத்தினர் பெயரில் தான் வீட்டை பதிவு செய்துள்ளதாகவும், எந்த ஒரு விஷயத்தையும் ஆதாரமில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம் என்றும், ரஜினியின் நல்ல மனதை கொச்சப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.