ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2019 (07:29 IST)

மாஸ் நடிகர்களுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் தேவையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய் போன்ற மாஸ் நடிகர்களுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் தேவை இல்லை என்றும் சுமாரான பட்ஜெட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்கள் எடுத்து அதிகபட்ச லாபத்தை தயாரிப்பாளர்கள் சம்பாதிக்கலாம் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் 500 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகி வசூலை அள்ளிய போதிலும், அந்த படத்தின் பெரிய பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுக்கவில்லை என்றும், ஒரு சிலர் அந்த படம் சுத்தமாக லாபம் கொடுக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்
 

இந்த நிலையில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் பட்ஜெட் 180 கோடி என்ற தகவல்கள் வந்துள்ளது. இந்த படம் குறைந்தபட்சம் 200 கோடி வசூல் செய்தால் மட்டுமே தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு ரூபாய் 20 கோடி லாபம் கிடைக்கும். ஒருவேளை இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுக்கும் 
 
பொதுவாக ரஜினி, அஜித், விஜய் ஆகிய மாஸ் நடிகர்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருப்பதால் படத்தின் ரிசல்ட் எவ்வாறு இருந்தாலும் நிச்சயம் முதல் மூன்று நாட்கள் நல்ல வசூலைக் கொடுத்து விடும். எனவே இந்த மாஸ் நடிகர்களை வைத்து நல்ல கதையம்சத்துடன் சுமாரான பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்தால் அதாவது 100 கோடிக்குள் பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்தால் கண்டிப்பாக அந்த படம் 120 முதல் 150 கோடி வரை வசூல் ஆக வாய்ப்பு உள்ளது. தயாரிப்பாளர்களும் நல்ல லாபத்தை பெறலாம் 
 
ஆனால் பிரமாண்டம் என்ற பெயரில் தேவையில்லாத செலவுகளை செய்து மாஸ் நடிகர்களின் படங்களின் பட்ஜெட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால் படம் எதிர்பார்த்த அளவு வியாபாரம் ஆகாத நிலையில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது
 
ரஜினிகாந்த் நடித்த குருசிஷ்யன், விஜய் நடித்த ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்ற படங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய லாபத்தை பெற்றன. அதே பாணியை தற்போது இல்ல இயக்குனர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே கோலிவுட் திரையுலகினர்களின் எண்ணமாக உள்ளது