சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகம் ஆகிறாரா பிரபல நடிகையின் மகள்?

sivakarthikeyan
சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகம் ஆகிறாரா பிரபல நடிகையின் மகள்?
siva| Last Updated: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (19:56 IST)
பிரபல நடிகர் நடிகைகளின் வாரிசுகள் பலர் சினிமாவில் அறிமுகமாகி வெற்றி பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பாலிவுட் பிரபல நட்சத்திர ஜோடியான அஜய் தேவ்கான் மற்றும் கஜோல் ஆகியோர்களின் மகள் நைஷா விரைவில் திரையில் அறிமுகமாகி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவர் தமிழ் திரைப் படமொன்றில் அறிமுக இருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் நைஷா அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும்,
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. பிரபல ஹிந்தி நட்சத்திர தம்பதிகள் வாரிசு தமிழில் அறிமுகமாக இருப்பதாக வெளிவந்த செய்திகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தனது மகளின் எதிர்காலத்தை அவர் விரும்பியவாறு தீர்மானிக்க முழு சுதந்திரம் அளித்துள்ளதாகவும், அவரை நடிக்க வேண்டும் என்று தாங்கள் வற்புறுத்தவில்லை என்றும், அவரே விருப்பத்துடன் தான் திரையுலகிற்கு வருவதாகவும் அஜய்தேவ்கான் - கஜோல் தம்பதிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அஜய்தேவ்கான், இயக்குனர் ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :