செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (22:09 IST)

ஹிந்தியில் ரீமேக் ஆகிறது ’கைதி’: ஹீரோ யார் தெரியுமா?

கடந்த ஆண்டு தீபாவளி அன்று விஜய் நடித்த பிகில் படத்துடன் வெளிவந்த திரைப்படம் கைதி. இந்த படம் பிகில் படத்தை விட ஐந்து மடங்கு பட்ஜெட் குறைவான படம். ஆனால் பிகில் படத்திற்கு இணையான வசூலை பெற்று மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து கொடுத்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கைதி திரைப்படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தை ஹிந்தியில் உருவாக்க அதிகாரபூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த திரைப்படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை ஹிந்தியில் தயாரிக்கிறது. இந்த படத்தில் கார்த்தி நடித்த வேடத்தில் அஜய் தேவ்கான் நடிக்க இருப்பதாகவும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர் குறித்த விவரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ’கைதி’ திரைப்படம் இந்தியிலும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது