செவ்வாய், 6 ஜூன் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified திங்கள், 24 பிப்ரவரி 2020 (20:07 IST)

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் அஜய்தேவ்கான்? ஆச்சரிய தகவல்

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் அஜய்தேவ்கான்?
மாநகரம் மற்றும் கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே இயக்கிய லோகேஷ் கனகராஜ், அதற்கு அடுத்த படமே விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார் என்பதும் தற்போது அவர் இயக்கி வரும் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் கமலஹாசன் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாகவும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மேலும் ’கைதி’ திரைப்படத்தில் கார்த்தி நடித்த வேடத்தில் அஜய்தேவ்கான் நடிக்க இருப்பதாகவும் இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தமிழில் ஹிட் கொடுத்தது போலவே இந்தியிலும் ‘கைதி’ திரைப்படத்தை ஹிட்டாக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்