1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (14:50 IST)

ஆண் நண்பரின் தோல் மீது உட்கார்ந்து ஆட்டம் போட்ட காஜல் அகர்வால் - வீடியோ இதோ!

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.
 
காஜல் தான் ஒரு நடிகை என்பதையும் தாண்டி பிசினெஸ் உமென் ஆகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது 34 வயது ஆகும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவெடுத்து மாப்பிளை தேடி வருகிறார்களாம். சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய காஜல் அகர்வால், "எனக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து  நல்ல மாப்பிள்ளையை தேடி வருகிறார்கள் நானும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளேன் என கூறியிருந்தார். 
 
அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹார்ட் ஷேப்பில் போஸ் கொடுத்து அந்த போட்டோவை இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்திருந்தார். மேலும் ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவுக்கு தலையில் பூக்கூடை வைத்து நேர்த்திக்கடன் செய்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் திருமணத்திற்கான சிக்னலாக பார்க்கப்பட்டிருந்தது. 
 
அந்தவகையில் தற்போது, 2020 ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காஜல், அங்கு நடந்த இசை கச்சேரியை தனது நண்பரின் தோளின் மீது ஏறி அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் அவரது தங்கையும் உடன் சென்றிருக்கிறார்.  அந்த வீடியோ காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வெறும் 5 மணி நேரத்தில் எக்கச்சக்க லைக்ஸ்களை குவித்து வருகிறது.