செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2019 (18:09 IST)

கல்யாணத்துக்கு ரெடி - எனக்கு புருஷனா வருபவருக்கு இந்த தகுதியெல்லாம் இருக்க வேண்டும்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.


 
இந்நிலையில் தற்போது 34 வயது ஆகும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவெடுத்து மாப்பிளை தேடி வருகிறார்களாம். சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய காஜல் அகர்வால், "எனக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து  நல்ல மாப்பிள்ளையை தேடி வருகிறார்கள் நானும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளேன். 
 
எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் நிச்சயம் இருக்கவேண்டும், " எனக்கு தெய்வத்தின் அதீத நம்பிக்கை இருக்கிறது. எனவே அவரும் தெய்வ நம்பிக்கை உள்ளவராக இருக்கவேண்டும். மேலும் என்னிடம் எப்போதும் அன்பாகவும், அக்கறையுடனும் நடந்துகொள்ளவேண்டும். இதுபோன்ற குணமுள்ளவர் கிடைத்தால் நான் உடனே திருமணம் செய்துகொள்வேன் என கூறினார். காஜல் அகர்வாலின் இந்த கண்டீஷன்களுக்கு ஓகே சொல்லி அவரது ரசிகர்கள் அப்லீகேஷன்ஸ்  போட்டு வருகின்றனர்.