1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 26 அக்டோபர் 2019 (10:19 IST)

இந்தியன் 2: சேனாதிபதிக்கு ஜோடியாக 85 வயது மூதாட்டி ஆன காஜல் அகர்வால்!

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர் இயக்கும் 14வது படம் இது. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் தாயாருக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர்,  ரகுல் ப்ரீத் சிங் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் அடிக்கடி செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது. அண்மையில் கூட கமல் ஹாசன் சேனாதிபதி தோற்றத்தில் கருப்பு குதிரையில் சண்டைக்கு செல்லும் காட்சிகளும் , ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்தியிருந்தது.
 
இப்படத்தில் சேனாதிபதி கதாபாத்திரத்தில் 90 வயது முதியவராக கமல்ஹாசன் நடிக்கிறார். அவரது மனைவியாக அமிர்தவள்ளி என்ற கதாபாத்திரத்தில் 85 வயது மூதாட்டியாக காஜல் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக சுகன்யா  நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.