வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:29 IST)

”விரைவில் திருமணம்”..ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காஜல்!!

காஜல் அகர்வால், தொழிலதிபர் ஒருவருக்கு ஓகே சொன்னதை தொடர்ந்து விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். 34 வயதாகும் காஜல் அகர்வால், சமீபத்தில் ஒரு தொழிலதிபரை காதலிப்பதாகவும், அவருடன் தனது குடும்பத்தோடு தர்காவில் வழிபாடு செய்ததாக புகைப்படங்கள் வெளியானது.

இந்நிலையில் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தனது இன்ஸ்டா பக்கத்தில் இதய வடிவத்தில் கைவிரல்களை வைத்தவாறு புகைப்படம் ஒன்றை காஜல் வெளியிட்டதை தொடர்ந்து இதன் மூலம் அவருக்கு திருமணம் ஆகப்போவதாக ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.