நாலு நாள் கழிச்சு என்கிட்ட வந்துதான் ஆகணும்: ‘கைதி’ தயாரிப்பாளர்

Last Modified செவ்வாய், 22 அக்டோபர் 2019 (20:36 IST)
விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த ’கைதி’ ஆகிய திரைப்படங்கள் வரும் 25-ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது. விஜய் நடித்த பிகில் திரைப்படம் 180 கோடி ரூபாய் பட்ஜெட், நாலு கெட்டப், ஸ்போர்ட்ஸ் ஆக்சன் படம், தளபதி விஜய்யின் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ள படம், லேடி சூப்பர் ஸ்டார் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடித்த படம் என்று மார்க்கெட்டிங் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டது

இதனால் ‘கைதி’ திரைப்படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றே தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ‘கைதி’ தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் பிகில் படத்திற்கு ரசிகர்கள் நான்கு நாட்கள் சென்று படத்தைப் பார்த்தால் ஐந்தாவது நாள் அவர்கள் அனைவரும் ‘கைதி’ திரைப்படத்தை பார்க்க வந்து தான் ஆக வேண்டும். அப்போது எங்களுக்கு தேவையான வருமானம் கிடைத்துவிடும்

மேலும் ‘கைதி’ படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறுவதில் உண்மை இல்லை. எங்கள் படத்தின் பட்ஜெட்டின்படி எங்களுக்கு தேவையான வருமானம் கிடைக்க, தமிழகம் முழுவதும் ‘கைதி’ படத்திற்கு 250 தியேட்டர்களில் கிடைத்தால் போதுமானது. அந்த வகையில் எங்களுக்கு தேவையான தியேட்டர்கள் கிடைத்து விட்டது என்பதால் ‘கைதி’ திரைப்படம் வருமானத்தை பெற்று தருவத்ஹில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றே நம்புகிறேன் என்று கூறியுள்ளார்
‘கைதி’
படத்தின் மீது அவர் வைத்திருக்கும் அபாரமான நம்பிக்கை வீண் போகாது என்றே கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :