திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (09:28 IST)

’டல்’ அடிக்கும் கடாரம் கொண்டான் – விக்ரம்தான் காரணமா ?

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள கடாரம்கொண்டான் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் தயாரிப்பாளர்களே நேரடியாக ரிலிஸ் செய்ய உள்ளனர்.

கமல் நடிக்கும் காலத்திலேயே அவர் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த நிறுவனம் சார்பாக பிற ஹீரோக்கள் நடிக்கும் படங்களைத் தவிர்த்து வந்தது. இந்நிலையில் கமல் அரசியலில் இறங்கி விட்டதால் நடிப்புக்கு முழுக்குப் போட இருக்கிறார். அதனால் இப்போது பிற நடிகர்களை வைத்து மீண்டும் படம் தயாரித்து வருகின்றனர். அதன் முதல் தொடக்கமாக விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கடாரம்கொண்டான் என்ற படத்தைத் தயாரித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாக விக்ரம் தனக்கான ஒரு வெற்றியைத் தேடிக் கொண்டிருக்க அதைக் கடாரம் கொண்டான் கொடுக்கும் என நம்பிக்கையில் உள்ளாராம். ஆனால் இந்த வாரம் ரிலீஸாக இருக்கும் படமோ இதுவரை தமிழ்நாடு திரையரங்கு உரிமை விற்கப்படாமல் உள்ளதாம். அதற்குக் காரணம் விக்ரம்மின் முந்தையப் படங்களான ஸ்கெட்ச் மற்று  சாமி 2 ஆகியவற்றின் தோல்வியே. இதனால் கடாரம்கொண்டான் படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. அதனால் படத்தை தயாரித்த டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமே வெளியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.