ஹிட் அடிக்குமா விக்ரம்-ரஹ்மான் கூட்டணி ??

Last Updated: சனி, 13 ஜூலை 2019 (17:22 IST)
நடிகர் விக்ரமின் 58 ஆவது திரைப்படத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ள நிலையில், இந்த கூட்டணி வெற்றி பெறுமா என கோலிவுட் ரசிகர்களிடம் முனுமுனுப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல நடிகர் விக்ரம், கடாரம் கொண்டான் திரைப்படத்தை தொடர்ந்து தனது ’58’ ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ள நிலையில், அந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. இந்த திரைப்படத்தை, டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார்.

இதற்கு முன் விக்ரம்- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில், புதிய மன்னர்கள் மற்றும் ராவணன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன, இந்த இரண்டு திரைப்படங்களும் வணிக ரீதியாக பெரும் தோல்வியை கண்டது. அதனைத் தொடர்ந்து தற்போது, மீண்டும் இணைய உள்ள நிலையில் இந்த திரைப்படம் ஹிட் அடிக்குமா என்று கோலிவுட் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் நடிகர் விக்ரமின் சமீபத்திய திரைப்படங்கள், எதுவும் வணிக ரீதியாகவும் ஜனரஞ்சகமாகவும் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவிருப்பதால், இது விக்ரமின் கேரியரில் ஒரு முக்கியமான திரைப்படமாக அமையும் என கோலிவுட் ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.  இதில் மேலும் படிக்கவும் :