விக்ரம் படத்தில் ஏ ஆர் ரஹ்மான் – ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு !

Last Updated: சனி, 13 ஜூலை 2019 (14:30 IST)
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விக்ரம், கமல் தயாரிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்புப் பணிகளை முடித்துவிட்டு இப்போது ஆர்.எஸ்.விமல் இயக்கும் மஹாவீர் கர்ணா படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 300 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பை அடுத்து இப்போது படப்பிடிப்பு இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விக்ரம், டிமாண்டி காலணி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகியப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் வியகாம் 18 ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்க இருக்கின்றன. இதையடுத்து இந்தப்படத்தின் முக்கிய அறிவிப்பாக இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் தொடங்கும் இந்தப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :