நீங்கள் விக்ரமுடன் நடிக்க வேண்டுமா? இதோ ஓர் முக்கிய அறிவிப்பு!

Last Updated: புதன், 10 ஜூலை 2019 (14:38 IST)
இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகிவரும் கடாரம் கொண்டான் படத்தையடுத்து நடிகர் விக்ரம் இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 


 
விக்ரமின் 58-வது படமாக உருவாகும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் வேகமெடுத்திருக்கும்  நிலையில், இப்படத்தில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துவைக்க இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 
 
அதற்காக படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் நிறுவனமும் இணைந்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விக்ரமின் 58-வது படத்தில்  நடிக்க விருப்பமுள்ள மற்றும் நடிப்பில் ஆர்வமுள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினர்களும் இமெயில் மூலம் புகைப்படங்களையும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் அனுப்புமாறு பதிவிட்டுள்ளார்.
 
எனவே உங்களில் யாருக்காவது விருப்பமிருந்தால் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மெயில் செய்து உங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்துங்கள். 


இதில் மேலும் படிக்கவும் :