விக்ரம் பிரபு படத்துக்கு சித் ஸ்ரீராம் இசை – அறிமுகப்படுத்தும் மணிரத்னம் !

Last Modified செவ்வாய், 9 ஜூலை 2019 (13:31 IST)
பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆக இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக சித் ஸ்ரீராம் பாடும் பாடல்கள் அனைத்தும் பிரபலமாகி வருகின்றன. இப்போதைய நிலையில் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் பாடகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும், விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் வானம் கொட்டட்டும் என்ற படத்திற்கு இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் விலக இப்போது சித் ஸ்ரீராம் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மணிரத்னத்தின் உதவி இயக்குனர் தனசேகரன் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மணிரத்னம் அறிமுகப்படுத்திய ரஹ்மான் உள்ளிட்ட பல கலைஞர்கள் இந்திய சினிமாவில் கொடிக்கட்டிப் பறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :