வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (15:55 IST)

காளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் ‘காளி’.
 
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.
 
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கால் வெளியாகவில்லை. 
 
தற்போது ஸ்ட்ரைக் முடிவடைந்ததை அடுத்து படம் வரும் மே 18-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.