வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (18:25 IST)

மே 11ஆம் தேதி 'இரும்புத்திரை' வெளியாகாது: விஷால் அறிவிப்பு

இரும்புத்திரை படம் வரும் மே 11ஆம் தேதி வெளியாகாது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
 
இரும்புத்திரை படத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன், ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.
 
தமிழ் திரையுலகின் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும், வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த படம் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால், தற்போது விஷால் மே 11ஆம் தேதி இரும்புத்திரை வெளியாகாது என அறிவித்துள்ளார். சில காரணங்களால் படம் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.