கமல் படத்துக்கு ரஜினி வைத்த டைட்டில்! கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்த ரகசியம்!

Last Modified செவ்வாய், 27 அக்டோபர் 2020 (11:08 IST)

தெனாலி படத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அந்த படத்தைப் பற்றிய ரகசிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

கமல் நடிப்பில் உருவான நகைச்சுவை படங்களின் பட்டியலில் தெனாலிக்கு முக்கியமான இடம் உண்டு. படத்தில் இலங்கை தமிழ் பேசும் நபராக கமல் கலக்கியிருப்பார். இந்த படத்தை ரஜினி மற்றும் கமலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார் இயக்கியதோடு மட்டும் அல்லாமல் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆனார். இந்த படம் வெளியாகி நேற்றோடு 20 ஆண்டுகள் ஆனதை ஒட்டி சமூகவலைதளங்களில் பலரும அதை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த கே எஸ் ரவிக்குமார் ‘இந்த படத்துக்கு தெனாலி என்ற பெயரை ரஜினிதான் பரிந்துரைத்தார்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :