கே ஜி எப் படத்தில் ரவினா கதாபாத்திரம் இதுதான் – பிறந்தநாள் பரிசுக் கொடுத்த படக்குழு!

Last Modified திங்கள், 26 அக்டோபர் 2020 (15:08 IST)

பாலிவுட் நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்துள்ள கேஜிஎப் படக்குழு.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரவீணா டண்டன் இப்போது கே ஜி எஃப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஆளவந்தான் மற்றும் சாது ஆகிய படங்களில் நடித்த இவரை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் இதுவரை இவரது கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்திருந்த படக்குழு , இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளனர். படத்தில் அவர ராமிகா சென் என்ற பெண் அரசியல் வாதி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் தென்னிந்தியா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றது. அதையடுத்து தற்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :