அவங்களுக்கு ஜாதி, மதம் தெரியாது.. பயம்ன்னா என்னன்னே தெரியாது: ‘தேவாரா’ டிரைலர்..!
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இரண்டு பகுதிகளாக இந்த படம் உருவாக்கப்படுவதாகவும் தற்போது வெளியாக உள்ளது முதல் பாகம் என்றும் கூறப்படுகிறது. ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் நடித்துள்ளார்.
கொரட்டாலா சிவா இயக்கத்தில் அனிருத் திசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. பயம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு கூட்டம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த இடத்திற்கு வரும் தேவாரா அந்த கூட்டத்தை எப்படி பயமுறுத்திருக்கிறார்? ஏன் பயமுறுத்திருக்கிறார்? என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது.
இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.