போய் ஆஸ்கர் விருதை வென்று வாருங்கள்… பிரபல இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த்!
இந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படமாக 2018 படம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன.
இந்நிலையில் இந்த படத்தை பார்த்து இயக்குனரை அழைத்து பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது சம்மந்தமாக பதிவிட்டுள்ள இயக்குனர் ஜூட் ஆண்டனி “என்னவொரு அற்புதமான நாளின் தொடக்கம். அற்புதமான படம். எப்படி இதை எடுத்தீர்கள் என ரஜினி சார் சொன்னதைக் கேட்டு ஆஸ்கர் விருதே கிடைத்தது போன்ற உணர்வு. போய் ஆஸ்கர் விருதை கொண்டு வா. அதற்கு என் ஆசிகள் மற்றும் பிராத்தனைகள் என்று கூறியதை மறக்க முடியாது.” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.