வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (13:15 IST)

திரைப்படம் ரிலீஸாகி 7 நாட்கள் கழித்து விமர்சனம் செய்ய நீதிமன்றத்தில் மனு

cinema poster
இன்று சமூக வலைதளங்கள் மலிந்துள்ளதால் திரைப்படம் ரிலீஸான சில மணி நேரங்களில் இப்படம் குறித்த விமர்சனம் வெளியாகிறது.

இதற்கு சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

திரைப்படத்தை சரியாக மதிப்பிடாமல், எதிர்மறையாக விமர்சிப்பது, அதன் வசூலை பாதிக்கும், சில படங்கள் தோற்கிடது. இதனால் பலரும் பாதிக்கின்றனர் என்றும், திரைப்படம் வெளியாகி 7 நாட்கள் கழித்து விமர்சனம் செய்ய உத்தரவிடக்கோர் கேரளா  உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் திரைப்பட விமர்சகர்கள் சினிமா தொடர்பான சமூக வலைதள பதிவாளர்களுக்கு படத்தை விமர்சிப்பது குறித்த வழிகாட்டு  நெறிமுறைகளை வகுக்க கோரிய மனு மீது விளக்கம் அளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரரப்பு அமைச்சகம் மற்றும் சினிமா சென்சார் போர்டுக்கு கேரளா நீதிமன்றம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.