திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (15:28 IST)

ஆஸ்கருக்கு செல்லும் டொவினோ தாமஸின் படம்...சினிமாத்துறையினர் வாழ்த்து

tovino thomas
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் டொவினோ தாமஸ். இவர் நடிப்பில் வெளியான 2018 என்ற படம் ஆஸ்கருக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் டொவினோ தாமஸ். இவர் நடிப்பில்,  ஜூடே ஆண்டனி ஜோசப் எழுதி இயக்கி படம் 2018. இப்படத்தை வேணு குணப்பில்லி தயாரித்திருந்தது.

இப்படத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து, போபல், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், நரைன். லால் உள்ளிட்ட பலரும்  நடித்திருந்தனர்.

இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்,  இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டியிட வுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.