செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 ஜூலை 2019 (17:23 IST)

சல்மான் கானுக்கு ஜாமீன் ரத்து: ஜோத்பூர் நீதிமன்றம்

பாலிவுட் நடிகர் சல்மான் கான், விசாரணைக்கு நேரில் ஆஜராகாவிட்டால், அவருக்கு ஜாமின் ரத்து செய்யப்படும் என ஜோத்பூர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு, ஜோத்பூர் அருகே கங்கானி என்னும் இடத்தில், அரிய வகை மான் ஒன்றை வேட்டையாடியதாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து ஜோத்பூர் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மேல்முறையீடைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சல்மானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் விசாரணை தொடங்கி ஏபரல் 3 மற்றும் ஜூலை 4 என்று இருமுறை சல்மான் கானை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

ஆனால், முன்றாவது முறையாக இன்றும் சல்மான் கோர்ட்டில் ஆஜராகவில்லை என தெரியவருகிறது. இதனால் அடுத்த முறை விசாரணைக்கு சல்மான் கான் ஆஜராகாவிட்டால் அவரது ஜாமின் ரத்து செய்யப்படும் என்று ஜோத்பூர் கோர்ட் எச்சரித்துள்ளது.