ஜஸ்ட் மூன்று படம்...ரூ.800 கோடி வசூல் : இளம் சூப்பர் ஸ்டார் ஹேப்பி!

cinema
Last Updated: வெள்ளி, 28 ஜூன் 2019 (16:38 IST)
அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது, பத்மாதி திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் நம் நாட்டில் நடந்த அத்துணை போராட்டங்கள், எதிர்ப்புகள் விமர்சனங்களை.இதில் ஒருபடி மேலே போய் இந்தப் படத்தில் பத்மாவதி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனேவின் தலைக்கு ஒருவர் விலை வைத்தார். இப்படியிருக்க அந்தப்படத்தில் அதிரடி வில்லனாக நடித்து பாலிவுட்டின் முக்கிய ஸ்டார்களையே மெர்சல் ஆக்கியவர் நடிகர் ரன்வீர் சிங்.
மேலும் ரன்வீர் சிங்கின் தும்பா, மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கல்லிபாய் ஆகிய 3 படங்களும் தயாரிப்பாளர்களுக்கு கல்லா கட்டியது. குறிப்பாக இந்த 3 படங்கள் மட்டும் ஒரு வருடத்திற்குள்ளாகவே ரூ. 800 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதனால் தான் நடித்த படங்கள் வெளியாகி மக்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறுவதுடன், தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூல் பெற்றுத்தருவதால் பாலிவுட்டின் இளம் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.
cinema
சென்ற வருடம் ரன்வீர் - தீபிகா படுகோனே இருவரும் திருமணம் காதல் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 
 


இதில் மேலும் படிக்கவும் :