வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 ஜூன் 2025 (11:04 IST)

வாடிவாசல் தள்ளிப் போனதின் காரணம் என்ன?.. வெளியான தகவல்!

வாடிவாசல் தள்ளிப் போனதின் காரணம் என்ன?.. வெளியான தகவல்!
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இந்நிலையில் தற்போது வாடிவாசல் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சூர்யா வெங்கி அட்லூரி படத்திலும், வெற்றிமாறன் சிம்பு நடிக்கும் படத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாடிவாசல் திரைப்படம் தள்ளிப்போக (அல்லது கிடப்பில் போடப்பட) என்ன காரணம் என்பதுதான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி.

இது சம்மந்தமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை வெற்றிமாறனிடம் 50 சதவீதக் கதைதான் நிறைவடைந்துள்ளதாம். ஆனால் சூர்யா முழுக் கதையையும் முடித்த பின்னர்தான் ஷூட்டிங் என்று சொல்லிவிட்டாராம். இதனால் வெற்றிமாறன் நான் கதையை முடித்துவிட்டு சொல்கிறேன் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போதைக்கு வாடிவாசல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் கைவிடப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.