ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (17:38 IST)

மாநாடு தயாரிப்பாளரின் அடுத்த படம்… வெளியான கலக்கலான ஃபர்ஸ்ட் லுக்!

வெற்றி கதாநாயகனாக நடித்த ஜீவி திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

வெற்றி கதாநாயகனாக நடித்த ஜீவி திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்ததால் படத்தின் வசூல் மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி களமிறங்கியுள்ளார். முதல் பாகத்தில் பணிபுரிந்த அதே கலைஞர்களே பணிபுரிய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சுரேஷ் காமாட்சி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதையடுத்து தற்போது அந்த படத்தின் முதல் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் இருக்கும் அந்த போஸ்டர் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.