1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (13:50 IST)

நாளை முதல் குற்றாலத்தில் இரவிலும் குளிக்க அனுமதி!

கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குற்றாலம் அருவிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. 
 
தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் 25.04.2022 (திங்கட்கிழமை) முதல் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.